இந்திய அணி T20 அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது.இதையடுத்து பலர் இந்திய வீரர்கள் மீது கடுமையான விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.சிலர் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியை புகழ்ந்து பேசி வருகின்றனர்.
தோனி மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்ததை குறிப்பிட்டு, அவருக்கு பிறகு யாரும் ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்று கொடுக்காததை சுட்டிக் காட்டி தோனிக்கு நிகர் தோனிதான் என புகழ்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரும் இணைந்துள்ளார்.
இதுகுறித்து தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள கம்பீர், ‘‘இந்தியாவுக்காக மூன்று விதமான ஐசிசி கோப்பையை வென்றுகொடுத்த ஒரே கேப்டனாக மகேந்திரசிங் தோனி இருக்கிறார். அவர் கோப்பைகளை மட்டும் பெற்றுக்கொடுக்கவில்லை. அணியை சிறப்பாக கட்டமைத்து, அடுத்து வரும் கேப்டன்களுக்கு இதனை பரிசாக வழங்கியிருக்கிறார்.

தோனிக்கு பிறகும் இந்தியா பலம் வாய்ந்த அணியாகத்தான் இருந்தது. ஆனால், ஐசிசி தொடர்களில்தான் தொடர்ந்து சொதப்பி வருகிறது’’ எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், ‘‘இனி எந்த கேப்டனும் தோனி அளவுக்கு, மூன்று ஐசிசி கோப்பைகளும் பெற்றுத்தர் போவதில்லை எனவும் கூறினார் கம்பிர்