நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது மேலும் வழக்கம் போல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் காவல்துறை அனுமதியுடன் மூன்று நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்து பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம்.
அந்தவகையில் இந்த ஆண்டும் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகரத்தில் பல்வேறு இடங்களில் காவல்துறை அனுமதியோடும் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தும் விநாயகர் சிலைகளை மூன்று நாட்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்து முன்னணி சார்பில் ஒன்பது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை இன்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு கூடுதல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரன் என மாவட்டத்தில் உள்ள ஆயிரம் போலிஸ் பாதுகாப்புடன் வாலாஜாபேட்டை ஐயப்ப ஆலயத்திலிருந்து முக்கிய வீதிகளின் வழியாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக வாகனத்தில் எடுத்து வந்தனர்.
பின்னர் வி.சி.மோட்டூர் ஏரியில் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சிலைகள் கரைக்கும் இடத்திலும் பலத்த பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சிலைகளை இறக்கி கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து வணங்கிய பின்னர் தீயணைப்பு வீரர்களைக் கொண்டு சிலைகளை ஏரியில் கரைத்தனர்.