இந்திய அணி மேட்ச் பிக்சிங் சர்ச்சைகளில் சிக்கிய காலகட்டத்தில் ரசிகர்கள் பலரும் கிரிக்கெட்டை வெறுத்து ஒதுக்கினர். அந்த காலகட்டத்தில் தான் இந்திய அணியின் கேப்டனாக சௌரவ் கங்குலி பொறுப்பேற்றார். பல ஊர்களில் இருந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து மீண்டும் இந்திய ரசிகர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை தூண்டியதில் மிக முக்கிய பங்கு கங்குலிக்கு உள்ளது.
அப்படி நம்முள் மீண்டும் கிரிக்கெட் ஆர்வத்தை தூண்டிய கங்குலி தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் ‘லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் 2022’ தொடர் இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்தியா கேப்டல்ஸ், மணிபால் டைகர்ஸ், பில்வாரா கிங்ஸ், குஜராத் ஜயன்ட்ஸ் என 4 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகளுக்கு முறையே கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், வீரேந்திர சேவாக் ஆகியோர் கேப்டன்களாக பங்கேற்கின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் முன்னணி வீரர்களும் இந்த அணிகளில் இடம் பெற்றுள்ளன.லெஜண்ட் லீக் போட்டியின் முன்னோட்டமாக இன்று மட்டும் சிறப்பு காட்சி ஆட்டம் நடைபெற உள்ளது.
அதில் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய மகராஜாஸ் அணியும், இயான் மார்கன்(இங்கிலாந்து) தலைமையிலான வேர்ல்டு ஜயன்ட்ஸ் என்ற உலக அணியும் மோதுகின்றன. பல ஆண்டுகளுக்கு பிறகு களம் காண உள்ள கங்குலி அணியில் கைப், பத்ரிநாத், சேவாக், அஜய் ஜடேஜா, ஹர்பஜன் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.

மோர்கன் தலைமையிலான உலக அணியில் கிப்ஸ், ஜான்டி ரோட்ஸ், காலிஸ், ஜெயசூரியா, ராம்தின், முரளிதரன், பிரட்லீ ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.எனவே பல ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள் களத்தில் இறங்குவதால் இப்போட்டியை ரசிகர்கள்
ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Reminiscing the BOSS batting of these ultimate Legends. Are you ready to witness their legendary batting?@darensammy88 @virendersehwag @ShaneRWatson33 @jacqueskallis75 @CapitalsIndia@GujaratGiants @manipal_tigers @Bhilwarakings #BossLogonKaGame #LLCT20 #LegendsLeagueCricket pic.twitter.com/PuMKeYdlFY
— Legends League Cricket (@llct20) September 15, 2022