இந்திய அணி தென்னாப்ரிக்காவுடன் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.இதுகுறித்து பலர் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது கவாஸ்கர் இந்தியாவின் தோல்வி பற்றி கருத்து கூறியிருக்கின்றார்.
அவர் கூறியதாவது ,”கேட்சை நழுவ விடுவது, ரன்-அவுட் வாய்ப்பை மிஸ் செய்வது போன்ற விஷயங்கள் கிரிக்கெட்டில் நடக்கக் கூடியதுதான். நாம் எந்தவொரு வீரரையும் தோல்விக்காக குற்றம் சுமத்த முடியாது.

அதிர்ஷ்டம் உங்களுடைய பக்கம் இல்லாதபோது, பெரிய வீரர்களும் கேட்ச் பிடிக்க தவறுவார்கள். ரன்அவுட் மிஸ் செய்வார்கள். இந்திய பந்து வீச்சின்போது ஒரு வீரர் 43 ரன்கள் விட்டுக்கொடுத்தது முக்கிய பிரச்சினை என்று நம்புகிறேன் என கூறியுள்ளார் கவாஸ்கர்