கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் தாதா திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுவதற்காக டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. சின்னத்திரையில் சரவணன் -மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமான நடிகர் கவின். இவர் அண்மையில் நடித்து வெளியான லிப்ட் படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் தாதா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 10-ஆம் தேதி வெளியாகிறது.
