திருச்சி மலைக்கோட்டையில் தாயுமான சுவாமி கோவிலுக்கு சொந்தமாக உள்ள 27 இடங்களில் உள்ள உண்டியல்கள் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டு காணிக்கை என்னும் பணி நடைபெற்றது.

திருக்கோவிலின் உதவி ஆணையர் ஹரிஹர சுப்ரமணியன் தலைமையில், திருவானைக்கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் என 170 க்கும் மேற்பட்டோர் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் 26 லட்சத்து 56 ஆயிரத்து 311 ரூபாய் ரொக்க பணம், 27 கிராம் தங்க நகைகள், 1810 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.