அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் ப்ரித்விராஜ், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த கோல்டு படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. அது தமிழில் நாளை தான் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதன்படி கோல்டு படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “அல்போன்ஸ் புத்திரனின் தனித்துவமான படத்தொகுப்பு மற்றும் மேக்கிங் ஸ்டைலுக்காக கோல்டு படத்தை பார்க்கலாம். முதல் அரைமணி நேரம் நன்றாக சென்றுகொண்டிருந்த படம் போகப் போக சலிப்படையச் செய்கிறது. கைதட்டி சிரிக்கும் அளவுக்கு ஆங்காங்கே காமெடிகள் உள்ளன. ஆனால் பிரேமம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்காதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
#Gold – a watchable movie from #AlphonsePuthren with his signature edits & making style..
— AB George (@AbGeorge_) December 1, 2022
Starting half an hour was great then it lost its flow.. High at some moments.. Some clap worthy comedy scenes & one liners here & there.. Don't expect anything like #Premam..#WATCHABLE.
மேலும் ஒருவர் கோல்டு படம் நிஜமாகவே கோல்டு தான். ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த பிளாக்பஸ்டர் வெற்றிக்காக அல்போன்ஸ் புத்ரன், ப்ரித்விராஜுக்கு வாழ்த்துக்கள். ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் மீண்டும் பார்ப்பேன் என்று தெரிவித்துள்ளனர்.இவ்வாறு இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது
#GoldMovie is just another #Gold💕
— Meera Pradeep (@MeeraPradeep97) December 1, 2022
from start to end enjoyed it very much, superb movie , that shots & musics are🙌🔥
congrats @PrithviOfficial,#Alphonseputhran & @PrithvirajProd for this blockbuster success
will watch again with family in coming Sunday😎#PrithvirajSukumaran pic.twitter.com/AHe55HJJYM