இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பிர் சூர்யகுமார் யாதவை பாராட்டி பேசியுள்ளார். டி20 உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக ஆடி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.
இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் மட்டுமே தோற்றது.
பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய 4 அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி இந்த உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவின் பங்களிப்புதான் முக்கிய காரணம்.
இந்நிலையில் இதுபற்றி கௌதம் கம்பிர் பேசுகையில் ,சூர்யகுமார் யாதவ் வித்தியாசமானவர். அவருடைய பேட்டிங்கை என்ஜாய் செய்ய வேண்டும். இவர் மாதிரியான வீரர் கிடைப்பது அரிது. இந்திய அணியில் இவர் மாதிரியான வீரர் இதற்கு முன் இருந்ததில்லை. அதுவும் 4ம் பேட்டிங் ஆர்டரில் இறங்கி 180 (194) ஸ்டிரைக் ரேட்டில் 3 அரைசதங்களுடன் 200 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார்.

என்னை பொறுத்தமட்டில் இந்த உலக கோப்பையின் தொடர் நாயகன் சூர்யகுமார் யாதவ் தான். ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என கூறியுள்ளார் கம்பிர்.