இந்தியா தற்போது T20 உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. எனவே அனைவரது பார்வையும் உலகக்கோப்பை மீதுதான் உள்ளது.இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பிர் விராட் கோலியின் மீது விமர்சனம் வைத்துள்ளார்.
அதாவது இந்த உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்றால், விராட் கோலி தன்னுடைய தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடக்கூடாது என தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தனிநபர் சாதனைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை, அணி வெற்றி மட்டுமே பிரதானமானது என கூறியிருக்கும் அவர், இதனை மனதில் வைத்து விராட் கோலி விளையாட வேண்டும் என சீண்டியிருக்கிறார்.

அப்படி விளையாடினால் அது அவருக்கும் நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.கவுதம் காம்பீரின் இந்த கருத்து விராட் கோலியின் ரசிகர்களை கடுமையாக கோபமடைய செய்துள்ளது. இதன் காரணமாக கம்பிர் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றார்