கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசிய கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகின்றது. பொதுவாக ஆசிய கோப்பை 50 ஓவர் போட்டிகளாகவே நடைபெறும். ஆனால் இம்முறை விரைவில் 20 ஓவர் உலகக்கோப்பை வரவுள்ளதால் அதற்கு பயிற்சியாக இருக்கும் என்ற நோக்கத்தில் 20 ஓவர் போட்டிகளாக ஆசிய கோப்பை நடத்தப்பட்டு வருகின்றது.
நேற்று நடந்த போட்டியில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 147 ரன்களை சேர்ந்தது. இதையடுத்து 148 என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி ஹர்திக் பண்டியாவின் அபார ஆட்டத்தால் இலக்கை எட்டியது.
பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். இந்நிலையில் பலரும் இந்திய அணியை பாராட்டி வரும் வேளையில் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பிர் அணி தேர்வை சாடியுள்ளார்.
அவர் கூறியதாவது, டி20 உலக கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி ஐந்து அல்லது 6 போட்டிகளில்தான் விளையாடுகிறது. இன்னும் நீங்கள் பிளேயிங் லெவனை தீர்மானிக்கவில்லை என்றால் எப்போது செய்யப்போகிறீர்கள்.
எனது அணியில் எப்போதுமே ரிஷப் பண்ட்க்குதான் முதலிடம், தினேஷ் கார்த்திக்கிற்கு கிடையாது. இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன்கூட இல்லை. இது அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும்” என்றார்.இந்நிலையில் தற்போது கம்பிர் கூறிய கருத்து கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது