தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து சர்ச்சைகளில் சிக்கியவர் கெளதம் கார்த்திக். இவர் தற்போது சிம்புவுடன் இணைந்து ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் அண்மையில் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவரும் காதலிப்பதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
அவர்களுக்கு வரும் நவம்பர் 28ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களது திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அந்த திருமண பத்திரிக்கை முழுக்க முழுக்க கையால் எம்பிராய்டரி செய்யப்பட்டு அழைப்பிதழ் உருவாக்கப்பட்டுள்ளது.
