மணிரத்னத்தின் கடல் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் கௌதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழில் பல படங்களில் நடித்து வருகின்றார். ரங்கூன் படத்தின் மூலம் தன் முழு நடிப்பு திறனையும் வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பிரபலமானார் கௌதம் கார்த்திக்.
தற்போது சிம்புவுடன் பத்து தல படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் ’தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்த போது கெளதம், மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாகவும் இந்த காதலுக்கு இரு குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்டி விட்டதை அடுத்து விரைவில் அதிகாரபூர்வ திருமண தேதி வெளியாகும் என்ற செய்திகள் கடந்த சில மாதங்களாகவே வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
ஆனால் இது குறித்து விளக்கமளித்த மஞ்சிமா மோகன் ’இது முழுக்க முழுக்க வதந்தி. தன்னுடைய பெற்றோர் இந்த வதந்தியால் மிகவும் மனமுடைந்து உள்ளனர் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் ஜோடியாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கௌதம் கார்த்திக்கின் நெருங்கிய நண்பரான கோபி என்பவரின் நிச்சயதார்த்த விழாவில் தான் இருவரும் இணைந்து கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்