தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து சர்ச்சைகளில் சிக்கியவர் கெளதம் கார்த்திக். இவர் தற்போது சிம்புவுடன் இணைந்து ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ’தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்த போது கெளதம், மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாகவும் இந்த காதலுக்கு இரு குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்டி விட்டதை அடுத்து விரைவில் அதிகாரபூர்வ திருமண தேதி வெளியாகும் என்ற செய்திகள் கடந்த சில மாதங்களாகவே வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
ஆனால் இதனை நடிகை மஞ்சிமா மோகன் மறுத்தார். தங்களிடையே காதல் எதுவும் இல்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் கெளதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மஞ்சிமா மோகனுடனான புகைப்படத்தை பகிர்ந்து தங்களுக்கிடையேயான காதலை உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.அந்த பதிவு இதோ
https://www.instagram.com/p/CkYLNwBvDF9/?utm_source=ig_web_copy_link