கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்துள்ள முருக்கம்பாடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் மற்றும் அரசு கல்லூரியில் படித்து வருகின்றன.
இந்த நிலையில் முருக்கம்பாடி கிராமத்தில் இருந்து கல்லூரி செல்லும் நேரத்திற்கு காலையில் எந்த பேருந்தும் சரிவர வரவில்லை எனக் கூறி ஆத்திரமடைந்த கல்லூரி பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தியாகதுருகம் திருவண்ணாமலை சாலையில் இன்று முருக்கம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டன பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து மணலூர்பேட்டை உதவி ஆய்வாளர் ராஜசேகரன் சம்பவ இடத்துக்கு வந்து கல்லூரி மாணவிகள் மற்றும் மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நேரத்திற்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க பதாக உறுதி அளித்தது பேரில் அங்கிருந்து கல்லூரி மாணவ மாணவிகள் அங்கிருந்து கலந்து சென்றனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.