பள்ளி மாணவ மாணவிகள் காவல் நிலையங்களில் நாள்தோறும் நடைபெறும் பணிகளை குறித்த விளக்கம் அளிக்க டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தலின்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு பள்ளியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ராசிபுரம் காவல் நிலையத்தை பார்வையிட வந்தனர். காவல் நிலையத்திற்கு வந்த மாணவ, மாணவிகளை துணைக் காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் மற்றும் காவல் ஆய்வாளர் சுகாவனம் மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பளித்து வரவேற்றனர்.
காவல் நிலையத்தில் நடைபெறும் அன்றாட பணிகள்,குற்ற வழக்குகள் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டால் காவல்துறையினருக்கு உடனடித் தகவல் அளித்தல், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுதல் உள்ளிட்ட காவல்துறையினர் பணிகளைக் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.பின்னர் காவல் நிலையத்தில் உள்ள துப்பாக்கிகளை பார்வையிட்டு, துப்பாக்கியை எவ்வாறு பயன்படுத்துவதை குறித்து விளக்கினர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் மாணவ மாணவிகளிடையே பேசுகையில் காவல்துறையினர் மீதுள்ள பயத்தை போக்குவதற்காக இதுபோல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தாதாகவும், காவல்துறை உங்கள் நண்பன் என்றும் மாணவ, மாணவிகளிடையே உரையாற்றினார்.