பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் துவங்கியது. வழக்கம் போல இந்த சிசனையும் கமல் தொகுத்துவழங்கி வருகின்றார்.இதில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சீசனில் மக்கள் மத்தியில் பிரபலமான போட்டியாளராக வலம் வருகின்றார் ஜி.பி.முத்து.இதைத்தொடர்ந்து தற்போது இந்த சீசனில் முதல் கேப்டனாக தேர்வாகியுள்ளார் ஜி.பி.முத்து. நேற்று இதனிடையே தற்போது இந்த நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
இதையொட்டி புதிய டாஸ்க்காக நிகழ்ச்சியின் முதல் கேப்டனுக்கான போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. கிளாக்கில் யார் அதிக நேரம் தொங்கியபடி நிற்கிறார்களோ அவரே பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டன் என்று கூறப்பட்டது.இதையடுத்து சாந்தி, ஜனனியுடன் இந்தப் போட்டியில் களமிறங்கினார் ஜிபி முத்து.

தொடர்ந்து அந்த கிளாக்கில் ஏறக்குறைய இரண்டு மணிநேரங்கள் தொங்கி நிகழ்ச்சியின் முதல் கேப்டனாகியுள்ளார். இதையடுத்து அனைத்து போட்டியாளர்களிடமும் அவர் சகஜமாக நட்புடன் பழகி வருகிறார்.நேற்றைய தினம் இவ்வாறு அவர் சக போட்டியாளர்களிடம் பேசியபொழுது அவர் தன்னுடைய மனைவியிடம் இதுவரை ஐ லவ் யூ சொல்லியிருக்கிறாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தனக்கு அதுகுறித்தெல்லாம் தெரியாது என்றும் இனிமேல் கூற வேண்டும் என்றும் தெரிவித்தார் ஜி.பி.முத்து