அண்மையில் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஜி.பி. முத்து சோஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றவர். டிக்டாக் மூலம் பிரபலமான இவர் அதன் தடைக்கு பின்னர் யூடிப் பக்கம் கரை ஒதுங்கினார்.
சோஷியல் மீடியாவில் இவர் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் மிக பிரபலம். அதற்கென்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இரண்டே வாரத்தில் தனது குடும்பத்தினர் நியாபகமாக இருப்பதாக கூறி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தார் ஜிபி முத்து.

இந்நிலையில் கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜி.பி.முத்து, சன்னி லியோனுடன் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில், நடிகை சன்னி லியோனுடன் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. நான் அவரைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ கூறியவுடன், அவர் என்னை பார்த்து ‘கியூட்’ என கூறிய போது சிலாகித்து போனேன்” என்றார்.