அண்மையில் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஜி.பி. முத்து சோஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றவர். டிக்டாக் மூலம் பிரபலமான இவர் அதன் தடைக்கு பின்னர் யூடிப் பக்கம் கரை ஒதுங்கினார். சோஷியல் மீடியாவில் இவர் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் மிக பிரபலம்.
அதற்கென்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.இந்நிலையில் கடைசி வரை மற்ற போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜிபி முத்து இரண்டே வாரத்தில் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ‘ஓ மை கோஸ்ட்’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஜிபி முத்து பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ”ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுதான் என்னுடைய முதல் படம். இயக்குநரிடம் நடிக்க பயமா இருக்குனு சொன்னேன். கவலைபடாதீங்க. சொல்ற படி நடிங்கனு இயக்குநர் சொன்னார்.
Popular tiktok-er/ reel-er/ ex-Bigg Boss contestant #GPMuthu's speech at #OhMyGhost Audio Launch, check it out. He utters his most popular 'Sethappayale', 'Naarappayale' & 'Nakku'. pic.twitter.com/6BBkB4aPOG
— Cinema Calendar (@CinemaCalendar) November 2, 2022
சன்னி லியோன்னு சொன்னாங்க. அவங்க யாருனு அப்போது எனக்கு தெரியாது. நிறைய கமெண்ட்லாம் வரும். ஆனாலும் எனக்கு தெரியாது. இதுதான் சன்னிலியோன்னு சொல்லி சில படத்தையெல்லாம் காமிச்சான் என சொல்ல ரசிகர்கள் மத்தியில் கரகோஷம் எழுந்தது.