டிக் டாக் செயலி மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானவர் ஜி.பி.முத்து. பின்பு அந்த செயலி தடை செய்யப்பட்ட பிறகு யூடூப்பில் வீடியோ வெளியிட்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இந்நிலையில் தற்போது கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றார் ஜி.பி.முத்து.
இதைத்தொடர்ந்து தற்போது ஜி.பி முத்து பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.இந்த படத்தை ‘பிரண்ட்ஷிப்’ படத்தை இயக்கிய, ஜான் பால் தான் இயக்குகிறார். திரில்லர் மற்றும் காமெடி கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடித்து வருவதாக கூறப்படுகிறது.
Tamil cinema update : @harbhajan_singh is back again with " Friendship " director John for another project. Will be a mystery plus dark comedy movie .
— Prashanth Rangaswamy (@itisprashanth) October 14, 2022
The movie will have @OviyaaSweetz playing the female role and GP Muthu playing a pivotal role . 70% shoot done !
மேலும் இந்த படத்தில் ஜிபி முத்து மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் தற்போது முடிவடைந்து விட்டதாகவும், மீதமுள்ள காட்சிகள் விரைவில் முடிவடைந்து இந்த படம் ரிலீசுக்கு தயாராகும் என தகவல் வெளியாகி உள்ளது.இதைத்தொடர்ந்து ஜி.பி.முத்து மேலும் இரு படங்களில் நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது