பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர், நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட டிக் டாக் பிரபலமாக இருந்தவர் ஜிபி முத்து.ஆனால் இதையெல்லாம் கடந்து தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய எதார்த்தமான அணுகுமுறையால், வெள்ளந்தி பேச்சாலும் ரசிகர்களை தன்வசமாக்கியுள்ளார் ஜிபி முத்து.
நாளுக்கு நாள் ஜி.பி முத்துவிற்கு ரசிகர்களின் ஆதரவு பெறுக திடீரென நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் ஜி.பி முத்து. தன் குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாதென கூறி தானாக நிகழ்ச்சியை விட்டு அவர் வெளியேற ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜி.பி முத்து சொன்ன விஷயம் தற்போது வைரலாகி வருகின்றது. அவர் கூறியதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் என் சகோதரரும் ஒரு இடத்தில வேலை பார்த்து வந்தோம். அப்போது எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட என் சகோதரர் என்னை பிளேடில் சரமாரியாக வெட்டினார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த என்னை நண்பர்கள் சிலர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றினர். மொத்தம் 175 தையல் எனக்கு போடப்பட்டது. ஆனால் இப்பொது என் சகோதரர் என்னுடன் இல்லை, இறந்துவிட்டார். அவர் வெட்டிய வலியை விட அவர் என் கூட இல்லையே என்றே வலி தான் அதிகமாக உள்ளது என்றார் ஜி.பி.முத்து.
.