தமிழில் கடந்த 2017 ஆ ஆண்டு முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகின்றது. அயல்நாடுகளிலும், மற்ற மொழிகளிலும் நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி நம் ஊருக்கு செட்டாகுமா என்ற கேள்வி பலரிடமும் இருந்து வந்தது. ஆனால் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அந்த சந்தேகத்தையெல்லாம் தகர்த்தெறிந்தார்.
கமலுக்காகவே இந்நிகழ்ச்சியை காண துவங்கினர் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 கோலாகலமாக துவங்கப்பட்டது. இதில் முதல் போட்டியாளராக களம் இறங்கினார் ஜி.பி முத்து. டிக் டாக் என்ற செயலியில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார் ஜி.பி.முத்து.
இந்நிலையில் ஜிபி முத்துவை பிராங்க் பண்ண நினைத்து கமல் ஒரு பக்கம் சிக்கித் தவித்து வரும் நிலையில், தூங்கும் போது ஜிபி முத்துவின் கால்களை சீண்டி அவரை அலற விட்டு விளையாடிய ராபர்ட் மாஸ்டரை தற்போது சோஷியல் மீடியாவில் ஜிபி முத்து ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
Fullll funnn 🤣🤣🤣🤣 #GPMuthu #GPMuthuArmy #biggboss6tamil #gpmuthu #KamalHaasan𓃵 #tamil pic.twitter.com/iPPm1V8fy0
— Nithish (@Nithishbabu15) October 9, 2022
ஜிபி மித்துவோட இன்னொசன்ஸ ஓவரா மிஸ்யூஸ் பண்றாங்க.. எப்படி பார்த்தாலும், தலைவனுக்குத் தான் ஓட்டு என ஜிபி முத்துவின் பிரம்மாண்ட ஆர்மி சோஷியல் மீடியா முழுவதும் அவருக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட்களை தெறிக்கவிட்டு வருகிறது.