கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார் கமல். மற்ற மொழிகளை போல தமிழிலும் மிகவும் பிரபலமான இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று துவங்கியது. நேற்றைய தினம் கமலால் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போட்டியாளர்களில் ஜி.பி. முத்து சோஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக உள்ளார்.
டிக்டாக் மூலம் பிரபலமான இவர் அதன் தடைக்கு பின்னர் யூடிப் பக்கம் கரை ஒதுங்கினார்.சோஷியல் மீடியாவில் இவர் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் மிக பிரபலம். அதற்கென்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது. படங்களிலும் நடித்து வரும் ஜி.பி, முத்து தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.
முதல் போட்டியாளராக உள்ளே சென்ற முத்துவிடம், டெக்னிக்கல் கோளாறு இன்னைக்கு ஒருநாள் நீங்க மட்டும் தான் இருக்க போறீங்க. நாளைக்கு மற்றவங்க எல்லாம் வருவாங்க என கமல் கூறினார்.உடனே ஜி.பி. முத்து ஒரு நாள் எல்லாம் தனியாக இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது சார், பயந்து அழுதுடுவன்னு ஓப்பனாகவே சொல்லி விட்டார்.
Adham ah 😂🤣 Mass fun loading 🤩 #GPMuthu #BiggBossTamil pic.twitter.com/H49q5sXZLC
— போக்கிரி (@PokkiriVJ_) October 9, 2022
அப்போது கமல் இதே மாதிரி தனியா இருந்தது ஆதாம், ஏவாளுக்கு எப்படி இருந்துருக்கும் என கேட்க, ஜி.பி. முத்து தனது வழக்கமான வெகுளிதனத்துடன் ஆதமா? என கேட்க, கமலே ஒரு நிமிடம் ஷாக்காகி முழித்துவிட்டார்.இந்நிலையில் தற்போது ஜி.பி.முத்து சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது