பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முக்கியமான போட்டியாளராக திகழ்ந்தவர் ஜி.பி.முத்து.முதல் இரண்டு வாரத்தில் அந்நிகழ்ச்சியில் டிஆர்பி எகிறியது அதற்கு முக்கிய காரணம் ஜிபி முத்து தான். இதனால் இந்த சீசன் இறுதிவரை ஜிபி முத்து இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது மகனின் உடல்நிலை கருதி இரண்டாவது வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிக் கொள்வதாக அறிவித்தார்.
இதையடுத்து ஓ மை கோஸ்ட் எனும் படத்தில் சன்னி லியோன் உடன் இணைந்து நடித்துள்ளார் ஜிபி முத்து. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.இந்நிலையில் இந்நிலையில், ஜிபி முத்துவிற்கு ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அது என்னவென்றால், அவரை அஜித் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இதனை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தில் தான் ஜிபி முத்துவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.எனவே இதை கேட்ட ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் காரணமாக தான் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புள் வருவதாக பேசி வருகின்றனர்