பிக் பாஸ் சீசன் 6 துவங்கி பத்து நாட்களை தான் கடந்துள்ளது.அதற்குள் இந்நிகழ்ச்சியில் பல சர்ச்சைகள் மற்றும் சண்டைகள் வெடிக்க துவங்கியுள்ளன. இது ஒருபக்கம் இருக்கையில் போட்டியாளர் அசல் செய்யும் விஷயங்கள் ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது.
சக பெண் போட்டியாளர்களிடம் தொடர்ந்து பல்வேறு சில்மிஷ வேலைகளை செய்து வருகிறார் அசல்.குவின்ஸியை தொடர்ந்து மகேஸ்வரி, மைனா நந்தினி, ஜனனி என பல பெண்களிடம் அவர் நடந்துகொண்ட விதம் முகம் சுழிக்கும் வகையில் இருந்தது.
இதுமட்டுமின்றி நிவாஷினியை காதலிப்பதாக கூறி வருகிறார்.இந்நிலையில் அசலின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்த ஜிபி முத்து, அவரை பங்கமாக கலாய்த்துள்ளார். ஆண் போட்டியாளர்களாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கிருந்து அசல் எழுந்து சென்றதை பார்த்த ஜிபி முத்து, என்ன தம்பி இப்பலாம் உனக்கு ஆம்பளைங்களே புடிக்க மாட்டேங்குதுனு கேட்க, சிரித்தே மழுப்பிக் கொண்டிருந்தார் அசல்.
#GPMuthu to #Asal yrn thambi ungaluku ambalaya aha pudika matunthu #GPMuthuArmy #BiggBossTamil6 pic.twitter.com/WWZg178aNn
— Biggboss Videos (@Biggboss_videos) October 21, 2022
இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது