காலத்திற்கேற்ப மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் இன்றைய காலத்தில் சரும அழகை பாதுகாக்க எத்தனையோ கெமிக்கல் கலந்த பல அழகு சத்தான பொருட்கள் வந்தாலும் சரும அழகை பராமரிப்பதில் இயற்கையான பொருட்களை அடித்துக் கொள்ள முடியாது. கடலைமாவு, பாசிப்பயறு, தயிர், மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்தினால் போதும் சருமம் பளபளப்பாகும். பிரபலங்கள் பலரும் மேக்கப்புக்காக விதவிதமான கிரீம்களை பயன்படுத்தினாலும், அழகை பராமரிக்க பாரம்பரியத்திலும் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். இதனால் இவர்களின் முகம் பளீரென ஜொலிக்கிறது.

CWC டைட்டில் வின்னர் ஸ்ருத்திகா… மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான இவர், 2002-ம் ஆண்டு சூர்யா நடித்த ஸ்ரீ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே போன்ற பல படங்களிலும் நடித்தார். அர்ஜூன் என்பவரை காதல் திருமணம் செய்து செட்டிலான இவர், சில மாதங்களுக்கு முன், தனியார் ‘டிவி’ சானலின் சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்; டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டிச் சென்றார். தன் துரு துரு பார்வை, குறும்புத்தனமான செயலால் மீண்டும் ஒரு ரவுண்டு வருமளவுக்கு அனைவரின் பார்வையையும் தன்பக்கம் கட்டிப்போட்டுள்ளார்.
சருமப்பராமரிப்பு குறித்து ஒரு பேட்டியில் இவரிடம் கேட்டபோது ,நான் என் சருமத்தை மிக பொலிவாக வைத்துக்கொள்ள ‘பச்சைப்பயிறை பவுடராக அரைத்து வைத்துக்கொள்வேன். தினமும் குளிக்கும்போது இரண்டு டீஸ்பூன் பச்சைப்பயிறு பவுடரை தண்ணீருடன் கலந்து பேஸ் மாஸ்க் ஆக பயன்படுத்துவேன். முகத்துக்கு குளியல் சோப் பயன்படுத்தமாட்டேன். எப்போதும் இந்த பவுடரை மட்டுமே பயன்படுத்துவேன். இதனால் எனது சருமம் மிகவும் பளபளப்பாக உள்ளது.எனவே இதனால் எண்ணெய் பசை, வறட்சி போன்ற சாரும பிரச்சனைகள் தவிர்க்க படுகிறது ‘ என்றார்.
பச்சைப்பயறு பேஸ் மாஸ்க் எப்படி?

முதல்நாள் இரவில் இரண்டு டீஸ்பூன் பச்சைப்பயறை பசும்பாலில் ஊறவைத்து மறுநாள் காலையில் மிக்சியில் நைசாக அரைக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10 – 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். பயிரில் உள்ள ஊட்டச்சத்துகள் சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இவை சருமத்தை சுத்தம் செய்வதால் பளபளப்பு உண்டாகிறது.
ஊறவைத்து அரைத்த பச்சைப்பயறுடன் கற்றாழை ஜெல்லை கலக்கி முகத்தில் தடவவும்; அப்போது, விரல்களால் சில நிமிடங்கள் வட்டவடிவில் மசாஜ் செய்து, 10 – 15 நிமிடங்கள் ஊறவைத்து தண்ணீரில் கழுவிவிடவும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன், சருமத்துக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது; இவ்வாறு செய்வதால் முகப்பருக்கள் வராமல் தடுக்கலாம்.