தாம்பரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில், தனிப்படை போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை, அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, நேற்று இரவு, மேற்கு தாம்பரம், பேருந்து நிலையத்தில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, மூன்று பேரை, தாம்பரம் போலீசார், பிடித்து விசாரித்தனர். அதில், புது பெருங்களதூர் , புத்தர் நகர் 3வது தெருவைச் சேர்ந்த, கார்த்தி, பழைய பெருங்களத்துரைச் சேர்ந்த, மணிகண்டன், வண்டலூரைச் சேர்ந்த பிரசாந்த் என தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து, சுமார் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.