குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு இன்று பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திகிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் டிசம்பர் மாதம் நிறைவு பெற இருக்கிறது . இதையடுத்து குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது.
குஜராத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 99 இடங்களையும், காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றின. குஜராத் சட்டசபையில் தற்போது பாஜகவின் பலம் 111 ஆகவும், காங்கிரஸின் பலம் 63 ஆகவும் உள்ளது.
இந்நிலையில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என்று அரசியல் மேதைகள் கருதுகின்றனர்.
குஜராத் சட்டமன்றத் தேர்தல் முன்னதாகவே அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் சில பல காரணங்களால் தேர்தல் அறிவிப்பு தள்ளி போய்விட்டது . ஒருபுறம் பாஜக தோற்றுவிடும் என்று கருதி தள்ளிப் போட்டுக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன. இந்நிலையில் இன்று குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.