Skygain News

குஜராத் தொங்கு பாலம் விபத்து – மீட்கும் பணியில் இறங்கிய முப்படைகள்

குஜராத் மாநிலத்தில் மோர்பி நகரில் மச்சி ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலம் 100 ஆண்டுகள் பழமையான பாலம் என கூறப்படுகிறது . பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருந்த அந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்கலாக நடைபெற்று வந்தன .

தற்போது சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்ததை அடித்து மக்களின் பயன்பாட்டிற்காக குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26ஆம் தேதி அன்று தொங்கு பாலம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று மாலை 6:00 மணி அளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தின் மீது திரண்டு நின்றிருந்தனர் . அப்போது எடை தாங்க முடியாமல் அந்த பாலம் திடீரென்று அறுந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர் .

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர் . மேலும் ராணுவம் ,கடற்படை ,விமானப்படை , தீயணைப்பு படையினரும் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .

ஆற்றில் சிக்கி இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிய வந்துள்ளது . மேலும் நீரில் மூழ்கிய மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More