தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன . இந்நிலையில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கர்நாடக மாநிலத்தில் இருந்து தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சப்ளை செய்வதற்காக கூண்டு வேன்களில் கடத்தி வரப்பட்ட 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 1750 கிலோ குட்கா போதை பொருட்களை போலீசார் இரண்டு கூண்டு வேன்களோடு பறிமுதல் செய்தனர் .
மேலும் மதுக்கூரை சேர்ந்த கணேசன் ஆலத்தூரை சேர்ந்த குணாளன் கரிகாலன் பெரமயன் ஆகிய நான்கு பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்