தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் தற்போது பரபரப்பான நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் பல படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். சமீபத்தில் சூரரைப்போற்று படத்திற்கு இசையமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார்.
இதைத்தொடர்ந்து தற்போது பல படங்களிலும் நடித்து வருகின்றார் ஜி.வி பிரகாஷ். இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் படு ஆக்டிவாக இருப்பவர். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். மேலும் ரசிகர்களின் ட்வீட்டுகளை லைக் செய்வார்.
இந்நிலையில் தன்னுடைய ஸ்டைலான புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார் ஜி.வி. பிரகாஷ் குமார்.அதை பார்த்த ஹேம ப்ரியா என்பவர் கமெண்ட் பாக்ஸில் கூறியதாவது,
சார், என் பெயர் ஹேமப்ரியா. கும்பகோணத்தை சேர்ந்த நான் பி.சி.ஏ. படித்து வருகிறேன். இந்த மாதம் தேர்வு துவங்குகிறது. கட்டணம் செலுத்த வேண்டும். தயவு செய்து உதவி செய்யுங்கள் சார் என்று கேட்டார்.

ஹேமப்ரியா கேட்ட தொகையை உடனே ஜிபே மூலம் அனுப்பி வைத்துவிட்டார் ஜி.வி. பிரகாஷ். உங்களின் ஜிபே கணக்கிற்கு பணம் அனுப்பி விட்டேன் என்று தெரிவித்தார்.
இவரின் இந்த உதவியை தற்போது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்