Skygain News

அஜித்திற்கு வில்லனாக நடிப்பதை பற்றி மனம் திறந்து பேசிய கௌதம் மேனன்..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் கௌதம் மேனன். சமீபத்தில் இவரது இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து கௌதம் மேனன் விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வந்தன.

மேலும் இதனை கௌதம் மேனனும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சில நாட்களாக கௌதம் மேனன் அஜித்தின் AK62 படத்தில் வில்லனாக நடிக்கப்போவதாக செய்திகள் உலா வந்தன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் அஜித் நடிக்கும் AK62 படத்தில்தான் கௌதம் மேனன் வில்லனாக நடிக்கப்போவதாக தகவல் வந்தது.இந்நிலையில் இதுபற்றி பேசிய கௌதம் மேனன், விக்னேஷ் சிவன் எனக்கு நெருங்கிய நண்பர்.

மேலும் அவர் AK62 படத்தை பற்றி என்னிடம் இதுவரை பேசவில்லை. ஒருவேளை அவர் என்னை நடிக்க அழைத்து அந்த ரோல் எனக்கு செட்டானால் கண்டிப்பாக அஜித்துடன் நடிப்பேன் என்றார் கௌதம் மேனன்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More