சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கௌதம் மேனன் பேசுகையில், வெந்து தணிந்தது காடு படத்தில் வாய்ஸ் ஓவர் இருக்காது என கூறியுள்ளார்.
பொதுவாக கௌதம் மேனன் படங்களில் வாய்ஸ் ஓவர் இடம்பெறும். ஆனால் சமீபகாலமாக கௌதம் படங்களில் அதிகமாக வாய்ஸ் ஓவர் இடம்பெறுவது ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது.

இதன் காரணமாக வெந்து தணிந்தது காடு படத்தில் வாய்ஸ் ஓவர் இருக்காது என கூறியுள்ளார் கௌதம் மேனன்.இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது