Skygain News

கெளதம் மேனனே இப்படி சொல்லிட்டாரே ? கலக்கத்தில் சிம்பு ரசிகர்கள்..!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் மாறுபட்ட நடிப்பில் உருவான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக நடிக்க ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் முத்து என்ற முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு முன்பு திருச்செந்தூரில் ஆரம்பமானது. இந்தப்படத்திற்காக 20 கிலோ வரை உடல் எடை குறைத்து முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

சித்தி , ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அண்மையில் இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பிவுள்ளது. இந்நிலையில் இந்தப்படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள கெளதம் மேனன், ” முதல்நாள் முதல் (5 மணி) காட்சியை பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக தூங்கிவிட்டு வர வேண்டும்.

ஏனென்றால், கதை மற்றும் கதாபாத்திரத்தின் ஓட்டம் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.கெளதம் மேனன் இவ்வாறு தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.