கௌதம் மேனனின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்ப்பை பெற்று வரும் நிலையில் அடுத்ததாக சூர்யாவுடன் இணைவதை பற்றி பேசியுள்ளார் கௌதம் மேனன். மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் கௌதம் மேனன்.
இயக்கிய முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைய அதைத்தொடர்ந்து காதல் மற்றும் ஆக்ஷன் படங்களை எடுத்து தனக்கென தனி முத்திரையை பதித்தார் கௌதம் மேனன்.வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற காதல் படங்களையும், வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, என்னை அறிந்தால் போன்ற ஆக்ஷன் படங்களையும் எடுத்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் சூர்யாவுடன் இணைவது பற்றி பேசியுள்ளார் கௌதம் மேனன். சூர்யா மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் வெளியாகி மெகாஹிட்டாகின.

எனவே இப்படங்களில் வாரணம் ஆயிரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் ஐடியா இல்லை என்றும், காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் கௌதம் மேனன்.இதனையடுத்து சூர்யா ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது