தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் மற்றும் சிம்பு என்றாலே வெற்றி கூட்டணி என்றாகிவிட்டது. இவர்கள் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதைத்தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இவர்களது கூட்டணி வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது திரையில் வெளியாகி இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்தப்படத்திற்கு முன்பாகவே ‘பத்து தல’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற MAFTI படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தமிழிலும் இயக்குனர் நரதனே இயக்கி வந்தார். தமிழ் ரீமேக் தாமதமானதால் கன்னடத்தில் யாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க கமிட் ஆனார் நரதன். இதனால் MAFTI
படத்தின் தமிழ் ரீமேக் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு,படத்தை இயக்க ‘சில்லுனு ஒரு காதல்’ இயக்குநர் கிருஷ்ணா கமிட் ஆனார். ‘

பத்து தல’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன், ‘பத்து தல’ படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பத்து தல திரைப்படம் டிசம்பர் மாதம் திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.