தமிழில் க்ளாஸான படங்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்தவர் கௌதம் மேனன். காதல் படங்களாக இருக்கட்டும், திரில்லர் படங்களாக இருக்கட்டும் அனைத்திலும் ஒரு வகையான க்ளாஸ் இருக்கும். மின்னலே படத்தில் துவங்கிய இவரது திரைப்பயணம் வெந்து தணிந்தது காடு வரை வெற்றிகரமாக செல்கின்றது.
சமீபத்தில் சிம்பு நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படத்தை பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். கவுதம் மேனன் ஒரு வாய்ஸ் ஓவர் பைத்தியம் என்றும் சிம்புவை வீணா போனவன் டான் ஆன கதை, துணை நடிகர் ஜாஃபரின் உயரத்தை கேலி செய்தும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் சிம்பு, உருவ கேலி செய்வது தவறு என கூறியிருந்தார்.இந்நிலையில் கவுதம் மேனன் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கியுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, இந்தப் படத்திற்காக சிம்பு மிகவும் கஷ்டப்பட்டார்.
உடல் எடையை குறைக்க கடினமாக உழைத்தார். கடந்த படத்தில் இல்லாத உழைப்பை இந்த படத்தில் சிம்பு கொடுத்தார்.ஆனால் விமர்சனம் என்ற பெயரில் எங்கேயோ உட்கார்ந்து கொண்டு படத்தை ஒரு நிமிடத்தில் கேலி செய்து பேசுகின்றனர்.வெந்து தணிந்தது காடு படத்திற்கு 80% பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது. ஆனால் விமர்சனம் செய்கிறேன் என அடுத்தவர் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போடாதீர்கள்.திரைப்படங்களை மரியாதையாக விமர்சனம் செய்யுங்கள்.
ப்ளூ சட்டை மாறன் பெயரை சொல்லவே கூடாது என நினைக்கிறேன். அவர் மீது பயங்கர கடுப்பும் பயங்கர வெறுப்பும் உள்ளது. அவருக்கு பணம் வர வேண்டும் என்பதற்காகவும் அவர் யூட்யூப் சேனலில் சம்பாதிக்க வேண்டும், செனலுக்கு ஸ்பான்ஸர்ஸ் வர வேண்டும் என்பதற்காக ரிவ்யூ கொடுக்கிறார்.திருச்சிற்றம்பலம் படத்தையே முதலில் கழுவி ஊத்திட்டுதான் படம் நல்லாருக்கு என்று சொல்வார். கிளாசாக இருக்கும் இயக்குனர்கள் என நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
#GVM about #Bluesattaimaran #VendhuThanindhadhuKaadu 😁 @tamiltalkies pic.twitter.com/HoJHn3Kf8t
— vigneshwaran (@vigneshgwaran) September 20, 2022
ஆனால் உண்மையிலேயே எனக்கு இறங்கி ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது என கூறியுள்ளார் கவுதம் மேனன்.என்னதான் பலரும் ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கி வந்தாலும் அவர் எதையும் பொருட்படுத்தாது விமர்சனம் செய்து தான் வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது