அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் தற்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் துணிவு. போனிகபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் அஜித் உடன் மஞ்சு வாரியர், பாவனி, அமீர், சமுத்திரக்கனி, சிபி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், துணிவு படம் குறித்து இயக்குனர் எச்.வினோத் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.அதில் அவர் கூறியதாவது : “வலிமை படம் ரிலீசாகும் முன்பே துணிவு படம் பண்ணுவது உறுதியாகிவிட்டது. இப்படத்தை நான் சின்ன பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டு இருந்தேன். அஜித் சார் கதை கேட்டதும் நான் இதில் நடிக்க விரும்புகிறேன் என சொன்னார்.

அதன்பின் தான் இது பெரிய பட்ஜெட் படமாக மாறியது. இது முழுக்க முழுக்க பணத்தை பற்றிய படமாக இருக்கும். சுருக்கமா சொல்லனும்னா அயோக்கியர்களின் ஆட்டம் தான் இந்த துணிவு.இதன் மூலம் அஜித் இப்படத்தில் நெகட்டிவ் கலந்த ரோலில் நடிப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்