தமிழில் எங்கேயும் காதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்பு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வர துவங்கினார் ஹன்சிகா.
தற்போது தன் உடல் எடையை எல்லாம் குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.தற்போது ஆர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் ஹாரர் காமெடி படம் கடந்த வாரம் தான் பூஜை உடன் தொடங்கியது.
இந்நிலையில் ஹன்சிகாவுக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.மும்பையை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரை தான் ஹன்சிகா திருமணம் செய்ய இருக்கிறார்.

ஹன்சிகாவுக்கு அவரது அம்மா தான் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் எனவும் தகவல் பரவி வருகிறது.ஆனால் இந்த தகவலில் எந்த அளவிற்கு உண்மை இருக்கின்றது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது