இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தலைமை வகித்து வருகின்றார். இந்நிலையில் பிசிசிஐயின் தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோருக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
என்னவென்றால் பிசிசிஐ பொறுப்பில் எந்த ஒரு அதிகாரியும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்க முடியாது என்ற ஒரு சட்டம் இருந்து வருகின்றது. இதன்படி கங்குலி ஜெய்ஷா கூட்டணி பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைகிறது. இதனால் இருவரும் தங்களது பதவியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை அடுத்து இந்த விதியை மாற்றிக்கொள்ள அனுமதிக்க கூறி பிசிசிஐ சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு கடந்த சில வாரங்களாக உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரச்சத் மற்றும் ஹீமோகோலி அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வந்தது. அப்போது பிசிசிஐ சார்பாக ஆஜரான துஷார் மேத்தா பிசிசிஐ, ஒரு தன்னாட்சி விளையாட்டு அமைப்பு என்றும் அதன் செயல்பாடுகளில் மற்ற அமைப்புகள் தலையிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிசிசிஐ கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பதவியில் நீடிக்க எந்த இடைவேளையும் தேவையில்லை என்று உத்தரவிட்டது. இதனை அடுத்து கங்குலி, ஜெய்ஷா ஆகியோர் மேலும் மூன்று ஆண்டுகள் பதவியில் நீடிக்க எந்த தடையும் இல்லை.இதனையடுத்து கங்குலி ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்