இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்பு 95% இருப்பதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
குறைந்தது 5 ஓவர்கள் கூட போட்டியில் வீசப்படாது என்ற அளவிற்கு மதியம் மற்றும் மாலை நேரங்களில் கடும் மழைப்பொழிவு இருக்கும் என அறிவித்திருந்தனர். இதனால் ரசிகர்கள் சோகமடைந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவின் வானிலை மாறியிருப்பதால் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மழைக்கான வாய்ப்பு 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் போட்டி முழுவதுமாக நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மேகம் மூட்டம் மட்டும் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.