இந்திய அணி சமீபகாலமாக சுமாரான பந்துவீச்சால் பல போட்டிகளை இழந்துள்ளது. என்னதான் இந்திய அணி பேட்டிங்கில் ஓரளவிற்கு சிறந்து விளங்கினாலும் பௌலிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. நடந்து முடிந்த ஆசிய கோப்பையிலும் சொதப்பலான பௌலிங்கின் காரணமாகத்தான் முக்கியமான போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
இவ்வளவு ஏன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்து முடிந்த முதல் T20 போட்டியில் என்னதான் 208 ரன்கள் அடித்தாலும் பௌலர்கள் அந்த ரன்களை வாரி வழங்கிவிட்டனர். இந்நிலையில் தற்போது இந்திய அணி மிஸ் செய்வது ஜஸ்பிரீத் பும்ராவைதான்.. காரணமாக சில காலம் போட்டிகளில் கலந்துகொள்ளாத பும்ரா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அவர் முதல் போட்டியில் ஆடவில்லை.காயத்தில் இருந்து மீண்டு வந்த அவருக்கு, சில தசை பிடிப்புகள் உள்ளது என்ற காரணத்தால் அவர் உட்காரவைக்கப்பட்டார். எனினும் அவர் குணமடைந்து வந்துவிடுவார் என கூறியிருந்தனர்.இந்நிலையில் இதுகுறித்து ஹர்திக் அப்டேட் கொடுதுள்ளார்.

அதில், பும்ரா இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்பது அனைவருக்குமே தெரியும் தான்.ஆனால் காயத்தில் இருந்து மீண்டு வந்த அவருக்கு, தேவையான நேரத்தை கொடுக்க வேண்டுமல்லவா??, ஒருவேளை அவசரப்படுத்தினால் அவருக்கு அழுத்தம் ஏற்படக்கூடும். எனவே அவருக்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படுகிறது. ஓய்வுக்கு பின் நிச்சயம் நல்ல கம்பேக் தருவார் என பாண்ட்யா கூறியுள்ளார். இதனைக்கேட்ட ரசிகர்கள் சற்று கலக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது