ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் மிக மோசமாக தோல்வியை அடைந்ததால் சீனியர் வீரர்களை 20 ஓவர் அணியில் இருந்து ஓரம் கட்ட பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
விராட் கோலியை தவிர மற்ற சீனியர் பிளேயர்கள் அனைவரும் ஓரம் கட்டப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் முனைப்பில் பிசிசிஐ இருப்பதால், எந்நேரமும் ரோகித் சர்மாவின் கேப்டன்சி பறிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது.இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தான் களமிறங்க இருக்கிறது.

இந்த போட்டிக்கு முன்பாக பேசிய ஹர்திக் பாண்டியா, அடுத்த 20 ஓவர் உலக கோப்பைக்கான பயணத்தை இந்திய அணி இப்போதே தொடங்கிவிட்டதாக தெரிவித்தார். அதன்மூலம் அடுத்த 20 ஓவர் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் என்பதை மறைமுகமாக அவர் கூறியிருப்பதாக யூகங்கள் கிளம்பியிருக்கின்றன. பிசிசிஐயும் அந்த முடிவில் தான் இருக்கிறது.