நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
இதையொட்டி இந்திய பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.இந்நிலையில் 2024-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு அணியை தயார்படுத்துவதற்கான திட்டமிடல் நியூசிலாந்து தொடரில் இருந்து தொடங்குகிறது. இது புதிய தொடக்கம். எங்களுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அதனால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பிறகு ஆலோசிப்போம்.
இந்த தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திறமையான இளம் வீரர்கள் இங்கு உள்ளனர். அவர்களும் ஓராண்டுக்கு மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்கள். சர்வதேச களத்தில் திறமையை வெளிப்படுத்த போதுமான வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.

புதிய வீரர்கள், புதிய உத்வேகம் எல்லாமே உற்சாகம் அளிக்கிறது. இந்திய அணியில் இடத்தை பிடித்த இளம் வீரர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும்’ என்றார்.