இந்திய அணி T20 உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்தது.இதன் காரணமாக பலர் இந்திய அணியை கடுமையாக விமர்சித்தனர்.அதில் ஒருவர் தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன்.இந்திய அணி கடந்த பல வாரங்களாக சரியாக செயல்படாத அணி என விமர்சித்தார் வாகன்.
இது குறித்து தற்போது ஹர்டிக் பாண்டியாவிடம் கேட்கப்பட்டது.அதற்கு பதில் அளித்த ஹர்திக் பாண்டியா, நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் மக்கள் உங்களை குறித்து கருத்து தெரிவிக்க தான் செய்வார்கள்.அவர்களுடைய கருத்தை மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம் இருக்கும்.
சர்வதேச அளவில் விளையாடும் போது நாங்கள் யாருக்கும் எங்களை நிரூபிக்க அவசியமில்லை என நினைக்கிறேன். இது ஒரு விளையாட்டு, இதில் நீங்கள் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வீர்கள். அதற்கான முடிவுகள் நடக்கும் போது நிச்சயம் நடக்கும். நாங்கள் இன்னும் டி20 கிரிக்கெட்டில் சில விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.தனை வருங்காலங்களில் சரி செய்து சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம்.

டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்வி எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் தொழில் முறை கிரிக்கெட் வீரராக இருக்கும் நீங்கள் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொண்டு அதில் இருந்து மீண்டு வந்து எப்படி வெற்றி அடைய வேண்டும் என்பது குறித்து தான் யோசிக்க வேண்டும் என்றார் பாண்டியா.