Skygain News

ஹரிஷ் கல்யாணுக்கு டும் டும் டும்..போட்டோவுடன் வெளியான தகவல்..!

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஹரீஷ் கல்யாண். தொடர்ந்து அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தாமாமா, பொறியாளன், வில் அம்பு, காதலி, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் திடீர் என வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். இந்த நிகழ்ச்சி இவரது சினிமா வாழ்க்கையையே புரட்டி போட்டது. ரசிகர்களின் ஆதரவோடு… 100 நாட்கள் உள்ளே இருந்த ஹரீஷ் கல்யாண் பைனல் வரை சென்று இரண்டாவது ரன்னர் அப்பாக வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை வந்து விட்டு வெளியே வந்ததும், பிக்பாஸ் ரைசாவுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘பியர் பிரேமா காதல்’ திரைப்படம், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா கேரியரில் நிலையான இடத்தை பிடித்து விட்டதால்… ஹரீஷ் கல்யாணுக்கு இவரது பெற்றோர் திருமணத்திற்கு தீவிரமாக பெண் பார்த்து வருவதாகவும், இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இவரது திருமணம் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில்… முதல் முறையாக தன்னுடைய காதலியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஹரீஷ் கல்யாண்.

தனது லைஃப் பார்ட்னரின் கையை கோர்த்திருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள ஹரீஷ் கல்யாண், புதிய மங்களகரமான தொடக்கம் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் விரைவில் அவர் யார் பெண் என்ற தகவலை வெளியிடுவார் என தெரிகின்றது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More