ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் T20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தொகுத்து பெற்றுள்ளது .இந்தியா,இங்கிலாந்து ,நியூஸிலாந்து ,பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.இந்நிலையில் தற்போது, பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ஆலோசகர் மேத்யூ ஹைடன், இனி பாகிஸ்தான் அணியை எந்த அணியாலும் வீழ்த்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
அதில், ‘‘முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோற்றதால், அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறுவார்கள் என பலர் பேசி வந்தனர். ஆனால், தற்போது அரையிறுதிக்கு வந்துவிட்டோம்.
மேலும், பாகிஸ்தான் அணி சரியான பார்மிலும் இருக்கிறது. இதனால், மற்ற அணிகள் பாகிஸ்தானை வீழ்த்துவது மிகமிக கடினம். தற்போதைய சூழ்நிலையில் எந்த அணியையும் பாகிஸ்தான் அசால்ட்டாக வீழ்த்தும். அரையிறுதி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எந்த அணியும் தோற்கடிக்கப் போவதில்லை’’ என ஹைடன் அதிரடியாக பேசியுள்ளார்.