இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை நாக்பூரில் தொடங்கவுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே இந்திய களங்களில் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் தான் அதிகம். அந்தவகையில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக ஆஸ்திரேலிய அணியில் நாதன் லியோன் தான் இருக்கிறார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய கவாஸ்கர், நாதன் லியோனை விட வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் தான் ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பவராக இருப்பார். கம்மின்ஸ் முதன் முதலில் 5 விக்கெட் ஹவுல் எடுத்தது ஆசிய கண்டத்தில் தான். லியோன் ஒரு டாப் பவுலர் தான். எப்போதுமே அச்சுறுத்தல் தருபவர். ஆனால் இந்திய மண்ணில் கம்மின்ஸ் போன்ற அட்டகாச பவுலர் தான் எதிர்பார்க்காத தாக்கத்தை ஏற்படுத்துவார்.

ஆஸ்திரேலிய அணி இத்தனை நாட்களாக வெற்றிகரமாக இருக்கிறது என்றால், அவர்களின் வேகப்பந்துவீச்சாளர்கள் செய்யும் பணிகள் தான் காரணம். கம்மின்ஸை மட்டும் எப்படியாவது சமாளித்துவிட்டால், இந்தியாவுக்கு நல்லது என கூறியுள்ளார்.