கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்த நிலையில், இன்று
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, தடா கோவில், கொத்தம்பாளையம் , உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழையால் அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.