தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை தற்பொழுது வரை அடைமழையாக நீடித்து வருகிறது தஞ்சாவூர் கும்பகோணம் பட்டுக்கோட்டை பேராவூரணி அதிராம்பட்டினம் கல்லணை என மாவட்டம் முழுவதும் விடிய விடிய பெய்த அடைமழை தற்பொழுது பகலிலும் நீடிக்கிறது 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த அடை மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தொடர் மழையை அடுத்து பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளதால் சாலைகள் தெருக்கள் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது தற்போது பெய்து வரும் மழை சம்பா சாகுபடிக்கு மிகவும் நல்லது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மல்லிப்பட்டணம் அதிராம்பட்டினம் சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது