Skygain News

தோனியையே அசரவைத்த ஹாங்காங் வீரர்..மறக்கமுடியுமா ?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியை
கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கிரிக்கெட் போட்டியில் டக் அவுட் செய்தார் ஹாங்காங் ஸ்பின்னர் ஐசான் கான். எனவே இன்று நாடாகும் இந்தியா மட்டும் ஹாங்காங் இடையேயான போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதனை நினைவு கூர்ந்து ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அன்றும் இதே துபாய் மைதானத்தில் ஹாங்காங் கேப்டன் ஆன்ஷி ராத் டாஸ் வென்று தைரியமாக இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். ரோஹித், தவான், ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, கேதார் ஜாதவ் என்று அதிரடி கும்பல் இருந்தும் ஹாங்காங் கேப்டன் இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார்.

அந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 22 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 23 எடுத்த நிலையில் அன்று எந்த ஒரு கிராஸ் பேட் ஷாட்டும் மாட்டாத நிலையில் ஈசான் கான் அருமையாக ‘ஃப்ளோட்டர்’ ஒன்றை வீசினார், ரோஹித் அதை வாரிக்கொண்டு ஸ்லாக் ஸ்வீப் ஆட முன் விளிம்பில் பட்டு எளிதான கேட்ச் ஆனது.

ரோஹித்தை காலி செய்தார் ஈசான் கான்.அன்று ஷிகர் தவான் 127, 15 பவுண்டரி 2 சிக்சர், அம்பதி ராயுடு 70 பந்துகளில் 60, தினேஷ் கார்த்திக்கே 33 ரன்களுக்கு 38 பந்துகள் எடுத்து கொண்டார். 41வது ஓவரில் ஷிகர் தவான் ஆட்டமிழக்கும் போது இந்திய அணி 240/3 ஆனால் அதன் பிறகு இந்திய அணியை எழும்பவிடவில்லை, ஹாங்காங், குறிப்பாக எம்.எஸ்.தோனி 3 பந்துகளே தாக்குப்பிடித்தார் ரன் எதுவும் எடுக்காமல் ஈசான் கான் பந்தில் எட்ஜ் ஆகி காலியானார். அப்போது தோனி ஆட்டமிழந்ததைப் பார்த்து ஆத்திரத்தை அடக்க முடியாத, இந்திய ஜெர்சியில் இருந்த சிறுவன் தன் இருக்கையை கிழித்தது வைரலானது.

இன்றைய தினம் ஹாங்காங் அணி இந்தியாவுடன் மோதும்போது ஈசான் கான் என்ற அந்த ஸ்பின்னரையும் இப்போதைய ஹாங்காங் கேப்டன் நிஜாகத் கானையும் நாம் நினைவில் கொள்வது எச்சரிக்கைக்காக என்பதுடன் ஹாங்காங் புறந்தள்ளக் கூடிய அணியல்ல என்பது ரோஹித் சர்மாவுக்கும் தெரியும் என்பதாலேயே.இந்நிலையில் இந்திய ஆணை இப்போட்டியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது என்பது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More